0 0
Read Time:1 Minute, 5 Second

சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டல பாடி, ஜெயகொண்டபட்டினம், அக்கரை ஜெயகொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து சிதம்பரம் நடராஜர் கோவில் சார்பில் தீட்சிதர் ராஜா தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொள்ளிடக்கரையோர பகுதி மக்களுக்கு படகில் சென்று தீட்சிதர் அன்னதானம் வழங்கினர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %