0 0
Read Time:3 Minute, 1 Second

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 10;
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மறைவட்ட அதிபர் தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மறைவட்ட தலைவர் ஜோசப் வரவேற்புரையாற்றினார். மாந்தை பங்குத்தந்தை ஜோசப் ஜெரால்டு அடிகளார், கூறைநாடு பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார், மணவாளநல்லூர் பங்குத்தந்தை அமலதாஸ் ஜான் அடிகளார், குத்தாலம் பங்குதந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குதந்தை மைக்கில் டைசன் அடிகளார், மாந்தை உதவி பங்குதந்தை அலெக்ஸாண்டர் அடிகளார் மற்றும் மறைவட்ட துணைத் தலைவர் அமலதாஸ், துணை செயலாளர் பிலமன்ராஜ், பொருளாளர் பீட்டர் தாஸ், இணை செயலாளர் எலிசபெத் ராணி, நிர்வாகிகள் பரிமளதாஸ், சினேகாஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநில துணை செயலாளர் எருக்கூர் தாஸ், தேசிய தலித் கிறிஸ்தவர்கள் கண்காணிப்பக தலைவர் சேகர், திரு இருதய சபை அருட்சகோதரர் பங்கிராஸ், சமூக ஆர்வலர்கள் நெல்சன், எட்வர்டு, வினோத், வழக்கறிஞர் தாமஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3-ஐ உடனே நீக்கம் செய்யவும், மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்காதிருக்கவும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பரிந்துரையை உடனே செயல்படுத்த வலியுறுத்தியும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %