மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50 வது பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டம் மற்றும் நிறைவு விழா இன்று இரவு நடைபெற்றது . விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில்,பள்ளி செயலர் அனிதா ராதா கிருஷ்ணன், குட்சமாரிட்டன் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் பிரவீண்வசந்த், அனுவா பிரவீன், அலெக்சாண்டர், ரினீஷா ஜேன் பள்ளி நிர்வாக அலுவலர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர், அகில இந்திய அளவில் 8அணிகள் பங்கேற்று கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி மற்றும் இந்திய ராணுவம் சிவம் அணியும் மோதியது இதில் இந்திய கடற்படை அணி 89: 59 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையையும் முதல்பரிசு தொகையான ரூ.1லட்சத்தினையும் வென்றது. இரண்டாமிடத்தை இந்திய இராணுவ அணி(சிவப்பு) பெற்று பரிசுதொகை ரூ.75ஆயிரத்தை வென்றது.
மூன்றாமிடத்தை இந்திய இராணுவம் (பச்சை) அணி பெற்று பரிசுதொகை ரூ.50ஆயிரத்தையும், நான்காம் இடத்தை ஜேப்பியார் அணி வென்று பரிசுதொகை ரூ.25ஆயிரத்தை வென்றது.வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை, மற்றும் பரிசுதொகையை தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ஆதவாஅர்ஜூன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில்விவேகானந்தா பள்ளி நிறுவனங்களில் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்