மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நமது நாகை வள்ளுவர் குல சங்கம் மற்றும் ஜோதிடர்கள் சங்கம் இணைந்து நடத்திய வள்ளுவர் குல அந்தணர்களின் முப்புரி நூல் விழா நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் மாவட்ட தலைவர் மாங்குடி எஸ்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழாவில் வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி கோவில் வளாகத்தில் இருந்து சங்கத்தின் மாவட்ட தலைவர் மாங்குடி எஸ் பிரபாகரன் திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கையில் ஏந்தியபடி ஊர்வலமாக மங்கள வாத்தியம் முழங்க வள்ளுவ அந்தணர்களின் வேத முழக்கத்தோடு மண்டபத்தை வந்தடைந்தது அங்கு திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வழிபாடு நடத்தினர்.
பின்பு கணபதி பூஜை சௌபாக்கிய யாக பூஜை நடைபெற்றது தொடர்ந்து வள்ளுவர் குல அந்தணர்கள் முப்பிறி நூல் அணியும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூஜை செய்து திருவள்ளுவரை வணங்கி பூணூல் அணிந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஜெயம் பழனிசாமி தலைவர் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர் சங்கம் , கே.எஸ்.கிருஷ்ணன் கவுன்சிலர் நாடி ஜோதிடர் தலைமை ஆலோசகர் ஏ சிவசாமி நாடி நூல் ஆசான், அருள்நிதி. என் எஸ் கண்ணன் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர் ஜோதி முருகன், மாவட்ட பொருளாளர் ஜோதி சிவா,
மதுரை க.பாலமுருகன் ஜோதிடர் அறிவன்V.J. ஹரிஹரசுதன் வரலாற்று ஆய்வாளர், ஆர் கணேஷ்வர்மாஜீ துணைச் செயலாளர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சரவணன் நாடி ஜோதிடர், ஆர்.ராஜேஷ் துணைச் செயலாளர் பெருஞ்சேரி, எம்.மகேஸ்வரன் இளைஞர் அணி துணைச் செயலாளர் செம்மங்குடி,
சி.ஆர்.பாண்டியன் ஒ. பொறுப்பாளர் சீர்காழி, சசிந்தரன் மு. கொள்ளிட ஒ.பொறுப்பாளர்
எம்.எஸ்.ராஜசேகரன் மு. சீர்காழி ஒன்றிய பொறுப்பாளர், ஏ.மணிகண்டன் ஒ. பொறுப்பாளர் செம்பனார்கோவில், T.கலையரசன் ஒ. பொறுப்பாளர் குத்தாலம் எம்.பிரபாகரன் ஒ.செயலாளர் ஆயர்பாடி, மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள் வள்ளுவ குல அந்தணர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்