அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் , இந்த செயலை ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாது, அது யார் செய்திருந்தாலும் தவறான செயல் மயிலாடுதுறை அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாறு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இதில் செம்பனார்கோயில் மற்றும் தரங்கம்பாடி பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கூறியதாவது :-
கஞ்சா வியாபாரிகளை பிடிப்பதற்கு காவல்துறையினர் இதற்கென தனிப்படையினர் இருப்பதாக கூறுவதாகவும், ஆனால் வீதிக்கு வீதி கஞ்சா விற்பனை நடைபெறுவதால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் அதன் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விவசாயத்திற்கு தேவையான யூரியா போன்ற இடுபொருட்களை தாராளமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கிறபோது நீலிக்கண்ணீர் வடிப்பதாக வேளாண்துறை அமைச்சர் கூறுவதாகவும் , இதில் நீலிக்கண்ணீர் வடிக்க அவசியமில்லை என்றும் இரண்டு மாதங்களாகவே யூரியா தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் யூரியா தேவையை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் இருப்பு வைப்பது தான் நல்ல அரசுக்கு அழகு என்றும் அதை செய்ய தவறிய இந்த அரசு வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் போடுகிறேன் என்று விளம்பரத்திற்காக செய்வதோடு நின்று விடாமல் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்கிட வேண்டும் என கூறினார்.
அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் , இந்த செயலை ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாது, அது யார் செய்திருந்தாலும் தவறான செயல் என்றும் கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.