இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழாவும் பவளவிழா நிறைவு கொண்டாட்டமும் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அதன் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில், காவல்துறை ஆய்வாளர் செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர் சந்தான கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் புத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மகாத்மா காந்திஜி, வ.உ. சிதம்பரம்பிள்ளை, கொடிகாத்த குமரன், சுப்ரமணியசிவா, காமராஜர் மற்றும் காயிதேமில்லத் ஆகியோரின் வேடணிந்த கலைஞர்கள், தேசபக்தி பாடல்களை இசைத்துக்கொண்டே ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மணிக்கூண்டு சென்றடைந்தார்கள். அங்கிருந்து பேருந்து நிலையம், கச்சேரிசாலையிலுள்ள சங்க அலுவலகத்தை வந்தடைந்தார்கள்.
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜ்குமார், வணிகர் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஏடிஎஸ். தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஜெகதராஜ், பாரி, ஆசிரியர் மன்ற மாநிலசெயலாளர் ஜெகமணிவாசகம், வணிகர் சங்க பொது செயலாளர் ஜி.டி.ரமேஷ், பொது தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் அ.அப்பர்சுந்தரம், கோடங்குடிசங்கர், விவேகானந்தா ராஜாராமன், மல்லியம்மூர்த்தி,துரை அஸ்வின்ராஜ், ரவீந்திரன், கதிரவன், செல்வம்,சின்னகலைஞர், கோபிநாத், முரளி, ஹரிபிரசாத், பிரதீப் ஆகியோர் பங்கேற்றார்கள்.
செய்தி:அப்பர்