தரங்கம்பாடி,ஆகஸ்ட்-15;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் 75 -ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக, செம்பனார்கோயில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைத்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினா. பின்னர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் நோட்டு, எழுது பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, ஒன்றிய துணை தலைவர் பாஸ்கரன், மயிலாடுதுறை மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்,அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.