ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் சி.பி.எஸ்.இ, பள்ளியில் 76-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளியின் முதல்வர் திருமதி.A.லதா தலைமையில் நடைபெற்ற 76-வது சுதந்திர தினவிழாவில் பள்ளியின் நிறுவனர் & தலைவர் Rtn.A.விசுவநாதன் அழைப்பினை ஏற்று குழந்தை நல மருத்துவர் Dr.R.பிரவீன்குமார் மற்றும் ரோட்டரி சங்க துணை ஆளுநர் Rtn.M.தீபக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
துணைஆளுநர் Rtn.M.தீபக்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்து மாணவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றியும், நமது கடமைகள் பற்றியும் அறிந்து நாட்டுபற்றினை வளர்த்துக்கொண்டு, நம்மால் முடிந்தவரை நாட்டிற்கு சேவையாற்றும் பண்பினை வளர்த்துக்கொள்ள அறிவுரைக் கூறினார்.
குழந்தைகள் நல மருத்துவர் Dr.R.பிரவீன்குமார் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பொது சேவைக்கு சிறந்த பங்களிப்பிற்காக முனைவர் பட்டம் பெற்ற ரோட்டரி சங்க சாசனத்தலைவர் முகமது யாசின் அவர்களை பள்ளியின் சார்பாக பள்ளியின் செயலர். திருமதி.H.சத்தியபிரியா ஹரிகிரிஷ்ணன் அவர்கள் பாராட்டினார். சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் இராஜசேகரன், செயலர் Dr.ரவி மற்றும் உறுப்பினர்கள் புகழேந்தி, பண்ணாலால், கேசவன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழச்சிகள் நடைபெற்றது.
பள்ளி 9-வது வகுப்பு மாணவர்கள் ஜருள், பிரதன்யா, விஷாலிபிள்ளை ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இறுதியில் பள்ளி மாணவி லாவண்யா நன்றி கூற நாட்டுபண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி