மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடியில் விநாயார் சிலைகள் தயாரிப்பு பணிகளை இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறுகையில்.
தமிழகத்தில் ஆகஸ்ட் – 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து இயக்கங்களின் சார்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்துக்களிடையே சாதி ரீதியிலான, பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை களைந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
3 அடி முதல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது.
வீடுதோறும்,வீதி தோறும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஒரிடத்தில் ஒருங்கிணைக்கப்படும். அங்கே இந்து இயக்கங்களின் பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.
பின்னர் விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் செண்டை மேளம், பம்பை மேளம், நாதஸ்வரம், மிருதங்கம் நையாண்டி மேளம் என பல்வேறு வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்று
ஆறு, குளம், வாய்க்கால், கடல் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
இதற்கான விநயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களில் குருமகாசந்நிதானங்கள், மடாதிபதிகள், ஆதீன
கர்த்தர்கள், சமயப் பெரியவர்கள் பங்கேற்க உள்ளனர்”.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்