50 ஆவது பொன் விழாவை காணும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மகளிருக்கான மாபெரும் கோலம் கோலப்போட்டி நடைபெற்றதுஇதில் சிறப்பு விருந்தினராக சீர்காழி மாவட்ட இசைப் பள்ளியைச் சார்ந்த ஓவிய ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நடன ஆசிரியர் விஐயலெட்சுமி கலந்து கொண்டு “போட்டியில் கலந்து கொள்வதே முதல் வெற்றி” என்று உரையாற்றினார் இப்போட்டியில் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் கு.சுகந்தி வரவேற்றார்.
விவேகானந்தா கல்வி குழுமத்தின் செயலர். ராதாகிருஷ்ணன் தலைமை உரை வழங்கினார் .இயக்குனர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடக்க உரை நிகழ்த்தினார் .முதல் பரிசாக 5000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 4000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 3000 ரூபாயும் ஆறுதல் பரிசாக 1000 ரூபாயும் செயலர் வழங்கப்பட்டது. முதல்பரிசு D.சித்ரா,இரண்டாம் பரிசுR.ராஜஸ்ரீ,மூன்றாம்பரிசுR.விபிஷா. S.வினிதா,S.சுஷ்மிதா ஆறுதல் பரிசினை பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரியின் துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்வில் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலரும் முன்னாள் கடற்படை வீரருமான சண்முகம் மற்றும் பேராசிரியர்களும் மாணவிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.
மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்