தரங்கம்பாடி, ஆக.22-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள் நல்லூரில் மின்கசிவால் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (36)மனைவி கவிதா (30)என்பவர் கூறை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ஆனந்தராஜ் மனைவி கவிதா நேற்று முன்தினம் சமைத்துக் கொண்டிருந்த போது. திடீரென தீ பிடித்தது வீட்டின் கூறை மீது பட்டு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீயில் வீடு முழுவதும் எரிந்ததில் வீட்டின் கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்களான டிவி, மிக்ஸி, கிரைண்டர், பிரிஜ்ட் உள்ளிட்ட பொருட்களும் மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பத்திர ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
இதில், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார், தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, இளைஞர் அணி செயலாளர் செந்தில், பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா, உள்பட பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்