0 0
Read Time:1 Minute, 49 Second

மயிலாடுதுறை 22.08.2022
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடைப் பணி முடித்து விட்டதால் பருத்தி முதல் கட்டம் முடிவடையும் நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பருத்தி வரத்து சீரானது செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், 850 குவிண்டால் பருத்தி அதிகபட்ச விலை குவிண்டால் ரூ.12,289-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.10,984-க்கும், சராசரியாக ரூ.11,650-க்கும் விலைபோனது.

இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டுவந்த பருத்தியை, தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளும் கலந்து கொணடு கொள்முதல் செய்தனர். பருத்தி அதிகபட்சம் ரூ.12,289க்கு விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %