மயிலாடுதுறை, ஆகஸ்ட் 27;
மயிலாடுதுறையில் தனியார் உரக்கடையினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.
செய்தியளர்களிடம் பேசியதாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத்திடவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரங்கள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரம் பதுக்கல் மற்றும் உரத்துடன் இணை பொருட்கள் சேர்த்து விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களை ஆய்வு செய்ய ஆணையிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் இயங்கி வரும் ஒரு தனியார் உரக்கடையினை வேளாண்துறை அலுவலர்களுடன் திடீர் ஆய்வ மேற்கொள்ளப்பட்டது. இதில் உர இருப்பு, விலைப்பட்டியல் மற்றும் பிஓஎஸ் இயந்திரத்தில் உரங்கள் இருப்பு மற்றும் பதிவேட்டில் உள்ள உர இருப்பு விபரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ப்பட்டது. மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ, உரங்களுடன் வேறு இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ, உரக்கட்டுப்பாடு சட்டம் 1985-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்வணிகம், விற்பனைத்துறை அலுவலர்களைக் கொண்ட சிறப்பு பறக்கும் படை அமைத்து ஐந்து வட்டாரங்களில் உள்ள 64 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், 118 தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் ஐந்து மொத்த உர விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியளர்களிடம் பேசினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்