தரங்கம்பாடி,ஆக.27:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் மரகத காலனி 17 வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர் முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி. கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார ஆய்வாளர் இளங்கோ வரவேற்று பேசினார்.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு கிராமப்புறங்களில் தூய்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளருக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய பாராட்டி பேசினார். அதைத்தொடர்ந்து மக்கும் குப்பை, மக்காத குப்பகளை தரம் பிரிக்கும் வகையில் பிளாஸ்டிக் கூடைகள் மற்றும் மஞ்சப்பைகள் வீடு வீடாக சென்று பேரூராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இதில் திமுக தரங்கை பேரூர் செயலாளர் முத்துராஜா, அவைத் தலைவர் மனோகரன், துணைத் தலைவர் மதியழகன், மாவட்ட பிரதிநிதி சடகோபன், இளைஞர் அணி பேரூர் செயலாளர் பாரி.சரவணன் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்