சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் ரத்த பரிசோதனை மையம் இணைந்து சிதம்பரம் எஸ்.பி கோயில் தெருவில் உள்ள ஜி எஸ் ஆர்த்தோ கேர் மையத்தில் இலவச ஆர்த்தோ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மருத்துவர் ஏ.வி. கிரிதரன்.வரவேற்புரை நல்கினார் சாசன தலைவர் P,முகமது யாசின் ,ரோட்டரி சங்க முன்னால் தலைவர்,ஜெயராமன்முன்னிலை வகித்தனர்.
சங்கத் தலைவர் ப.ராஜசேகரன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் M.தீபக்குமார், முகாமை தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில், எலும்பு அடர்த்தி பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, மூட்டு தேய்மானம், சர்க்கரை நோய் பரிசோதனைகளை, மருத்துவர்கள் கிரிதரன், பிரியதர்ஷினி, விஜயராகவன் மற்றும் மருத்துவ குழுவினர்கள் செய்து, ஆலோசனைகளையும், மாத்திரைகளும் வழங்கினர். இந்த முகாமில் சங்கத்தின் பொருளாளர் கேசவன், நடனசபாபதி, சீனுவாசன், ஆறுமுகம்,பாவிக் புகழேந்தி, ஆகிய கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை பன்னால் ஜெயின் செய்தார்.நன்றியுரை செயலாளர் வெ.ரவிச்சந்திரன் கூறினார்
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி