மயிலாடுதுறை, செப்டம்பர்-05;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரியிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்ப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் கலைமகள் கலை (ம) அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வழங்கினார்.
அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழங்கி பேசியதாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மூவலூர் இராமாமிரதம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து உயர் கல்வி பயில மாந்தோறும் ரூ.1000 வழங்கும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்திருக்கின்றார். அத்திட்டத்தின் தொடக்கமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் விழாவில் கலந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியவில் அனைத்து ஆசியர்களை போற்றுவிதாமாக ஆசிரியர் தினம் மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுகளுக்கு முன்பாக பெண் 100 அடிமைத்தனம் ஏற்பட்டபோதும், தேவதாசி முறை எதிர்ப்பில் ஈடுப்பட்ட பெண் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் கிடைக்கபெற்றாலும், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு இத்திட்டம் சென்றடைவது மிக உயர்ந்த உன்னத திட்டம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரலாற்றில் மிக முக்கிய இடம்பெற்றுள்ள மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் பெண்களின் கல்விக்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொறு துறையிலும், குறிப்பாக கல்வித்துறையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பள்ளிகல்வித்துறைக்கு ரூ.36,500 கோடி, உயர் கல்வித்துறைக்கு ரூ.5.500 கோடி ஆசு மொத்தம் ரூ.42,000 கோடி நிதி ஒதுக்கிய இது தான் முதல் முறை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா பெருந்தோற்று காரணமாக கல்வி பயில முடியாத சூழ்நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இல்லம் தேடி கல்வி திட்டத்தின் வாயிலாக கல்வியை மீட்டெடுத்த பெருமை மாண்புமிகு முதல்வர் அவர்களையே சாரும். தமிழ்நாட்டின் தந்தையாக இருந்து இந்த கனவை நான் நிறைவேற்றுகிறேன் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டையப்படிப்பு, தொழிற்கல்வி ஆகிய வற்றில் பயின்று வேறு எந்த கல்வி உதவித்தொகை பெற்றிருந்தாலும் ரூ.1000 மாதாமாதம் வழங்கப்படும். வறுமையால் உயர் கல்வி செல்ல முடியாத நிலையிலுள்ள மாணவிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். மற்ற மாநிலங்களை காட்டிலும் இது குறைவு தான் என்றாலும் உயர் கல்விக்கு 100 சதவிகிதம் செல்ல வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள். இதில் ஒரு கையெடு உள்ளது, என்னவெல்லாம் படிக்க வேண்டும் அதில் அந்த ரூ.1000-த்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் உள்ளது. உயர் பதவிகளுக்கு செல்லவதற்க்கு விலைமதிப்பற்றதாக இருக்கும். 12 மாதம் கழித்து செலவுகள் தொடர்பாக எவ்வாறு செலவிட்டோம் என்பதை அறிந்தாலி, எதிர்காலத்தை எந்த சூழ்நிலையையும் கையாளும் தகுதி பெறலாம்.
மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டதுபோல் அதிக அளவில் பெண்கள் அரசு அலுவலகங்களிலும் பொறுப்புகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியார், அவரின் கருத்துகள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோர்கள் வழியாக பெண் சொத்துரிமை, உயர்கல்வி ஆண்களுக்கு நிகராக உயர்ந்திருக்கீர்கள், தமிழ்நாட்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை உயர்த்துவதற்க்கு பல முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளார்கள். தமிழக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்க்கு 20 மணி நேரமும் அயராது பாடுபடுபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான். 1989 ஆண்டு தமிழகத்தில் 49 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன ஆனால் 2022-ம் ஆண்டு 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த ஒரு ஆண்டில் மட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உருவாக்கி தந்துள்ளார்கள். 10 கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக பெற்றுத்தந்துள்ளார். இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே. இவ்வாறு மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா, சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, கல்வி குழும நிர்வாக அறங்காவலர் ரம்யா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்