மயிலாடுதுறை கொள்ளிடம்: கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் இடத்தை படகில் சென்று கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் படகில் செய்து ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.85 கோடி செலவில் புதிதாக மீன்பிடி இறங்குதளம் மற்றும் அலையாத்தி காடுகள் – சதுப்புநில காடுகள் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் நேற்று படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கலெக்டர் லலிதா கூறியதாவது:-கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் கொடியம்பாளையத்தில் புதிதாக மீன்பீடி இறங்குதளம் மற்றும் மாங்ரோ காடுகள், சதுப்புநில காடுகள், விரிவாக்க பணிகள் நடைபெற உள்ள இடத்தினை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். விரைவில் பணிகள் தொடங்கப்படும் இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான மீன்பிடி இறங்கு தளம் ரூ.2.85 கோடி செலவில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சதுப்பு நிலக்காடுகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிதம்பரத்தில் இருந்து கொடியம்பாளையத்துக்கு ஒரு நாளைக்கு 3 முறை பஸ் இயக்கப்படும். அனைத்து கிராம அண்ணா மறுமலச்சி திட்டத்தின் கீழ் கொடியம்பாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி அடையும் இதன் மூலம் இந்த ஊராட்சியில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன்கடை உள்ளிட்ட கட்டிடங்கள் ரூ.4 கோடி செலவில் ஒரே வளாகத்தில் கட்டப்பட உள்ளது.
மேலும். பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதால் கொடியம்பாளையம் ஊராட்சி வளர்ச்சி அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ். தேசிய சுற்றச் சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனத்தலைவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜந்தாடே, வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புதுறை, வனத்துறை ஆகிய துறைகளைச்சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் உடனிருந்தனர்.