சிதம்பரத்தில் குமரன் குளம் புனரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டில்குமரன் குளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது சிதம்பரம் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புறம் மேம் பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் , ரூ.81லட்சத்து 40 ஆயிரம் செலவில் குமரன் குளத்தை தூர் வாரிபுனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா குளக்கரையில் நடைபெற்றது.
விழாவுக்கு சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந் தில்குமார் தலைமை தாங்கி, அடிக்கல்நாட்டி
புனரமைப்புபணிகளை தொடங்கி வைத் தார். விழாவில் நகராட்சி – ஆணையாளர் பொறுப்பு) மகாராஜன், துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி மின் கண் காணிப்பாளர் சலீம்,ஒப்பந்ததாரர் ரஜினி காந்த், தி.மு.க. மாவட்ட பிர திநிதி கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் பாலசுப் பிரமணியன், நகர இளைஞ ரணி செயலாளர் மக்கள் அருள், கவுன்சிலர்கள் தாரணி அசோகன், அப்பு சந்திரசேகர், சி.கே.ராஜன், வெங்கடேசன், மணிகண் டன், சரவணன் உள்படபலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி