0 0
Read Time:2 Minute, 50 Second

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவா முதல்வரை நேரில் சென்று சந்தித்து பேசினர்.

அவர்களில் முன்னாள் முதல்-மந்திரி திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோரும் கோவா முதல்-மந்திரியை சந்தித்தனர்.

இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டோம். பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போகிறோம் என கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள தருணத்தில், இந்நடவடிக்கையை காங்கிரசார் எடுத்து உள்ளனர். சமீப நாட்களாக காங்கிரசில் இருந்து வெளியேறும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் காங்கிரசில் இருந்து விலகியதும் அவருக்கு அதரவாக முக்கிய பொறுப்புகளில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகினர்.

கடந்த 4-ந்தேதி குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வகேலா விலகினார். அதற்கு முன் கட்சியில் இருந்த ராஜீந்தர் பிரசாத் கடந்த 2-ந்தேதி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் விலகினார். இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்து தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %