தரங்கம்பாடி, செப்.18: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை மாவட்ட விஸ்வகர்மா நல சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவிற்கு எஸ்.முருகன் தலைமை வகித்தார், அவைத் தலைவர் வெங்கடாச்சலம், செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எ.ரவி வரவேற்றுப் பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் எம். இந்திரா காந்தி, வாஸ்து நிபுணர் அகோரம், தலைமை ஆசிரியர் முருகன் ஆகியங கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
பாரம்பரிய விஸ்வகர்மா ஸ்தபதியார்களை மேம்படுத்து வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும், மாநில அரசு கலைமாமணி விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டும்.
தச்சர்,பாத்திர, சிற்ப, பொற்கொல்லர் செய்கின்ற விஸ்வகர்மா சமூக மக்களின் கல்வி, பொருளாதாரம் வேலை வாய்ப்பு சமூக அந்தஸ்து மேம்படைய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்
பாரம்பரிய நகை தொழிலாளர்களை தமிழக கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி அமர்த்தி அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும், மேலும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு கமிஷன் உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
இதில் விஸ்வகர்மா நல சங்கம் ஒருங்கிணைப்பாளர்கள் அருணாச்சலம், வினோத்குமார், ஆலோசகர்கள் சம்பந்தம், பாஸ்கர், முத்துக்குமாரசாமி உள்ளிட்ட மயிலாடுதுறை, குத்தாலம் கொள்ளிடம், செம்பனார்கோவில், சீர்காழி பகுதியை சேர்ந்த ஒன்றிய அமைப்பாளர்கள், நிர்வாகிகள் என என 1000-க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்