0 0
Read Time:1 Minute, 44 Second

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்கு உட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966-ன்படி சட்ட விரோத செயலாகும். எனவே இச்சட்டத்தை செயல்படுத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் சர்க்கரை துறை ஆணையர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட கரும்பை விவசாயிகள் வேறு சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல கூடாது. இதையும் மீறி சேத்தியாத்தோப்பு, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், ஓலையூர், பாளையங்கோட்டை, சோழத்தரம் உள்ளிட்ட பகுதி கரும்புகளை வேறு ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால் வேளாண்மை உதவி இயக்குனர்கள், தாசில்தார்கள், போலீசார் இணைந்து தடுத்து நிறுத்தலாம். பின்னர் அந்த கரும்புகளை எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %