மயிலாடுதுறையில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். நகர தலைவர் மோடி கண்ணன் வரவேற்று பேசினார். இதில் மாநில வக்கீல் அணி பொறுப்பாளர் வக்கீல் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பா.ஜ.க.வினர் 10 பேர் கொல்லப்பட்டதையும், கலவரத்திற்கு காரணமாக கூறப்படும் மேற்குவங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராம.சிவசங்கர், தமிழ் வளர்ச்சிப்பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில் பாலு, மாவட்ட செயலாளர் அழகேசன், ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரவடிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர்: யுவராஜ், மயிலை.