செம்பனார்கோவில், செப்டம்பர்- 22;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள், கலை அறிவியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் இரத்த சோகை விழிப்புணர்வு முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர், வி.அமுதவள்ளி தலைமையில் நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குநர் பேசியதாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறைக்கு ரூ.2500 கோடி இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கர்ப்பினி பெண்கள் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவை நீங்கள் வாங்கி சாப்பிட வேண்டும். உங்களுடைய ஆரோக்கியத்தை பாதுகாக்க தமிழக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்பம் ஆரோக்கியமாக இருந்தால் தான் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க முடியும். கர்ப்பினி பெண்கள் நீங்கள் குழந்தை பிறந்த பின்பு 6 மாதம் வரை தாய் பால் அவசியம் கொடுக்க வேண்டும். வளரிளம் பெண்கள், கர்ப்பினி பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும். செப்டம்பர் மாதம் உட்டசத்து மாத மாகவும் உணவே மருந்தாகும். கர்ப்பினி பெண்கள் சமச்சீரான மற்றும் சத்தான உணவு சாப்பிட வேண்டும், மூன்று வேலையும் நன்றாக சாப்பிட வேண்டும். சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம்மான தேதியிலிருந்து 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து அதிகரிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு உடனே தாய்பால் தரவேண்டும். தாய்பால் அமிர்தம் போன்றது. கலப்படம் இல்லாத உணவு தாய்பால் மட்டுமே. நான் உங்களுடைய தாயாக இருந்து சொல்கிறேன். நான் சொல்ல கூடிய கருத்துகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, செம்பனார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்) அ.தமீமுன்னிசா, செம்பை ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், வட்டாரம் மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் மற்றும் மருத்துவ குழுவினர், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்