காட்டுமன்னார்கோயில் அரசு கலைக்கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக பழகுநர் உரிமம் வழங்கி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டதன் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி விமலா கல்லூரிக்கு சென்று சாலை பாதுகாப்பு வகுப்பு எடுத்தார் அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன படிவங்களை ஆன்லைனில் விண்ணப்பித்து மாணவர்களுக்கு உதவியாக ஆசிரியர் சரவணன் செயல்பட்டார் ஓட்டுநர் உரிமம் பெற்ற மறுநாள் கேம்பஸ் இன்டர்வியூவில் ஐந்து பேருக்கு இதன் மூலம் வேலை கிடைத்தது.
இதில் மாணவ மாணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவியர் தனது ஆசிரியர்களுடன் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு அருணாச்சலம் அவர்களிடம் இருந்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டனர் எவ்வித இடைத் தரகரும் இன்றி பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பித்து உரிமம் பெற அரசு வழிவகை செய்துள்ளது இதனை முறையாக பயன்படுத்தி ஒரு கிராமப்புற அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் பயன் பெற்றிருப்பது இதுவே முதல் முறை இதில் மொத்தம் 50 பேர் பயனடைந்துள்ளனர் பெற்றோர் மத்தியிலும் இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி