நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அருகிலுள்ள இலுப்பூரில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நெல் உலர்த்தும் இயந்திரத்தை பார்வையிட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூரில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் பார்வையிட்டும். அங்கு நடமாடும் நெல் உலர்த்தி டிராக்டர் இயந்திரத்தால் இயங்கக் கூடிய நெல் உலர்த்தி செயல்விளக்கம் மேற்கொள்ளப்பட்டது. நடமாடும் நெல் உலர்த்தி மூலம் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதத்தினை 21 சதத்திலிருந்து 14 சதவீதம் என்ற அளவிற்கு குறைக்க முடியும். இதற்காக ஆகும் நேரம் 3 மெ.டன் நெல்லை 2 மணி நேரத்தில் உலரச் செய்து விடலாம். இதற்காக ஆகும் செலவு ஒரு டன்னிற்கு ரூ.2000-2500 செலவாகும். ஈரப்பதத்தை குறைக்கப்பட்ட நெல்லை அதிக நாட்கள் பாதுகாத்து இருப்பு வைக்கலாம். நெல்லின் தரம் கெடாமல் பாதுகாக்கப்படும். பூஞ்சாணம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்து அதிக நாள் இருப்பு வைக்கப்படும். நெல்லின் நிறம் மாறாமல் பாதுகாக்கப்படும்.
இவ்வாய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெ.சேகர், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செ.ஜெயபால், வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்குநர் ப.தாமஸ், வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாய சங்கப் பிரநிதிகள், விவசாயிகள் ஆகியோர் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்