சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மருந்தாளுநர்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணி, போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ,நடைபெற்றது மருந்தாக்கியல் துறை பேராசிரியர் த தனபால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் மருந்தாளுநர் பங்களிப்பு பற்றிய பதாகையை மருத்துவப் புல முதல்வர் சண்முகம் அவர்கள் வழங்க பொறியியல் புல முதல்வர் முருகப்பன் பெற்றுக்கொண்டார். உறுதி மொழி ஏற்பு பதாகையை மருந்தாக்கியல் துறைத்தலைவர் .கே ஜானகிராமன் மற்றும் சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளர் சைலஜா அவர்கள் வழங்க சிதம்பரம் துணை காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் பெற்றுக்கொண்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்பு பேரணியை கொடியசைத்து காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் அவர்கள் துவங்கி வைத்தார்கள் பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சிதம்பரம் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் உறுப்பினர்கள், சிதம்பரம் லயன்ஸ் கிளப் ஆப் சோசியல் மிஷன் அண்ட் விஷன் உறுப்பினர்கள் கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மருந்தாளுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டு மாணவர் பேரவைத் தலைவர் ஹரிஹரன் அவர்களும் மாணவர்களை ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு மயூரி மெடிக்கல்மற்றும் சண்முகவிலாஸ் பேக்கரி சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டது.
பேரணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜே வெங்கட சுந்தரம் அவர்கள் நன்றியுரை கூறினார்கள் .
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி