0 0
Read Time:2 Minute, 54 Second

இந்தியாவின் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பிஎஃப்ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிஎஃப்ஐ மாநில தலைமை அலுவலகத்திலும் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்ட நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில், என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்களை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே என்ஐஏ சோதனை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தற்போது அந்தந்த மாநில காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %