1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 12-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு விடுமுறையும் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல்
9-ம் தேதி வரை விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,
ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அதே வேளையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி
அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.