0 0
Read Time:6 Minute, 42 Second

செப்டம்பர் :28 கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்ட நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் மாவட்ட தலைவர் மாங்குடி எஸ் பிரபாகரன் பங்கேற்றார். இந்நிகழ்வில் ஜோதிடத்திற்கு என்று தனியாக வாரியம் அமைத்து அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் இணைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வள்ளுவர் குலம் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு திருவள்ளுவர் மக்கள் கூட்டமைப்பு வள்ளுவர் குல மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சங்கங்களின் சார்பில் முதலாமாண்டு அகில இந்திய வள்ளுவர் குலம் மாநாடு காலாபட்டி தனியார் மஹாலில் மாநிலத் தலைவர் அருண்கோபால் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் (பொறுப்பு) உதயகுமார் பொருளாளர் சேர்த்தா அமைப்புச்செயலாளர் கிருஷ்ணகுமார் கொள்கை பரப்பு செயலாளர் இளங்கோ பங்கேற்றனர். மேலும் ஆதி ரமேஷ், த. தமிழரசு, ஜெகநாதன் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் கோ.மா.இ.செந்தில் வேல், இளைஞர் அணி தலைவர் கருணாகரன், விஜயலட்சுமி ஜெகதீஸ்வரன், ராணிமணி, முத்துக்குமார் திருப்பூர், நவநீத ராஜன் காஞ்சிபுரம், டாக்டர் சுகுமார் சென்னை, ஆ ஓம். மன்னன் ஜி. பிரகாஷ் கர்நாடக வன்னை ஜெயவேல், ஸ்ரீராமுலு தலைவர் ஆந்திரா, குணசீலன் ஈரோடு, தேனி மாரிமுத்து, ஆர்மி குமார் கிருஷ்ணகிரி, பக்கிரி சாமி திருவாரூர், டாக்டர் விஜயகுமார் திருவண்ணாமலை, திருப்பதி ராஜன் மதுரை, சங்கர் மலையாண்டி வேலூர், மாங்குடி பிரபாகரன் நாகை மயிலாடுதுறை, குணசீலன் ஈரோடு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இம் மாநாட்டிற்கு சென்னை, கரூர், விழுப்புரம், சேலம், கர்நாடகா ,ஆந்திர பிரதேசம் ,கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருவாரூர் ,ஈரோடு, திண்டுக்கல் ,மதுரை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பாண்டிச்சேரி, புதுச்சேரி, நாகை, தேனி ,கோவை, மயிலாடுதுறை மற்றும் பாரம்பரிய ஜோதிடர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள், குழந்தைகள் என 1500 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்,
இதைத்தொடர்ந்து இதனை தொடர்ந்து மாநாட்டின் முக்கிய தீர்மானங்களாக தமிழக அரசு அறிவித்துள்ள பட்டியல் இனப் பிரிவில் வரிசை எண் 68 இல் திருவள்ளுவர் என்றும் வரிசை எண் எழுவதில் வள்ளுவன் என்றும் அரசுப்பதிவில் உள்ள எங்கள் இனத்தின் பெயரை ஒன்றாக இணைத்து ஒரே பெயரில் வள்ளுவர் என்று பெயர் திருத்தம் செய்து அரசு ஆணை வழங்க வேண்டும் வள்ளுவன் திருவள்ளுவர் இனத்தின் பெயரை பிற சாதியப் பெயர்களுடன் அல்லது பட்டியல் வகுப்பில் எந்த ஒரு பொது அடையாளப் பெயர்களுடனும் சேர்த்து அறிவிக்காமல் வள்ளுவர் என்று தனியாக அடையாளப்படுத்தி அரசு அறிவிக்க வேண்டும்.
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசு அறிவிப்பில் வரலாற்று காலம் முதல் பாரம்பரியமாக வள்ளுவர் பண்டாரங்களாகிய நாங்கள் கோவில்களில் தமிழ் தமிழ் முறைப்படி பன்னிரு திருமுறைகள் பாடும் அர்ச்சராகவும், ஓதுவராகவும், ஜோதிடர்களாகவும் இருக்கும் எங்களை கோவில்களில் அர்ச்சகராக பணி அமர்த்த தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். வள்ளுவர், திருவள்ளுவர்,இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் கருத்தில் கொண்டு தமிழர் அரிச்சுவடியில் குருமார்களாக வணங்கப்பெறும் வள்ளுவர் குல மக்களை தனித்துவமாக அறிவித்து மூன்று சதவீதம் தனி சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும். நமது நாட்டின் பல மாநிலங்களில் வள்ளுவர், திருவள்ளுவர் இன மக்கள் மத்திய அரசின் ஓபிசி பிரிவில் இடம் பெற்று சலுகைகள் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் ஓபிசி பிரிவில் இணைத்து சலுகைகள் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஜோதிடத்திற்கு என தனியாக வாரியம் அமைத்து அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் ஜோதிடர்களை இணைக்கலாம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தில் மாவட்ட தலைவர் மாங்குடி எஸ்.பிரபாகரன் பங்கேற்றார் உடன் மாவட்ட துணைத் தலைவர் ஜோதி முருகன் மாவட்ட பொருளாளர் ஜோதி சிவா மாவட்ட செயலாளர் என்‌.எஸ் கண்ணன் மாவட்ட துணை செயலாளர் கணேஷ் வர்மா ஜி மாவட்ட துணைசெயலாளர் ராஜேஷ் மு.கொள்ளிடம் ஒன்றிய பொறுப்பாளர்
சசிதரன் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிவு, மகேஸ்வரன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %