தரங்கம்பாடி, அக்.1:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரர்ரூம், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன், எமனை காலால் எட்டி உதைத்த தலமான இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள். மேலும் பக்தர்கள் சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். ஆயுள் விருத்திக்காக உத்தர சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள். இந்த நிலையில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர் உறவினர் 60-வதாம் கல்யாணத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். கணேச குருக்கள் பிரசாதம் வழங்கினார்.
படவிளக்கம்: திருக்கடையூர் அமிர்தகசர் கோயில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் படம்
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்