சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக பொது நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து பேரூராட்சிக்குட்பட்ட சக்கரா அவென்யூ பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான தொடக்கநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் க.பழனி தலைமை தாங்கினார், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தமிழ்ச் செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன், இளநிலை பொறி யாளர் கணேஷ், தொழில் நுட்ப உதவியாளர் ஜஸ்டின் ராஜா, வார்டு கவுன்சிலர் சபரிராஜன், குடிநீர் திட்டப் பணியாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி