திமுக கட்சியின் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதியவா்கள். இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.
இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார்.
இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.