சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலை நகர் இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் அளவில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டாக்டர் ருக்மணி அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் முனைவர் ச.பிரகதீஸ்வரன் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.பேர்லின் வில்லியம் முன்னிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியை டாக்டர் ருக்மணி பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
அ.ப.கழக கடல் வாழ் உயிரி முன்னாள் புல முதல்வர் முனைவர் கே.கதிரேசன் மற்றும் வின்சாஃப்ட் இயக்குனர் ரோட்டேரியன் கே.நிர்மலா வாழ்த்திப் பேசினார். செயலாளர் முனைவர் க.சின்னையன் நன்றி கூறினார். நிகழ்ச்சிச்சியை தமிழாசிரியை திருமதி ஜோசபின் தேவகிருபைஅவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 200 மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி