தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அத்துடன், நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் கரூர் நாமக்கல் சேலம் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பத்தூர் அரியலூர் பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் ஓரளவு மலை குறைவாக இருந்தாலும் மாலை இரவு நேரங்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை கிண்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி கல்லூர்க்கு செல்வோரும் வேலைக்கு செல்வோருடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானானர்.