சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,சமூக நல மருத்துவத்துறை மற்றும் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி இணைந்து, சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக பெண் குழந்தைகள் தினம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை அமலா வரவேற்புரை நல்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த. ஜெயராமன் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ப. ராஜசேகரன் முன்னிலை வைத்தனர்.
சிதம்பரம் டெம்பிள் ரோட்டரி சங்கத்தின் தலைவர்.G. ராஜராஜன் தலைமை வைத்தார். மண்டல துணை ஆளுநர் M. தீபக் குமார் அவர்கள், பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கத்தையும், பாதுகாப்பையும் பற்றி எடுத்துக் கூறினார். மருத்துவர்கள் தேவி, காயத்ரி, சந்தியா மற்றும் குழுவினருடன் பள்ளியில் பயிலும் 320 மாணவிகளுக்கு ரத்த தொகுதி வகை மற்றும் ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பெண் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் சங்கத்தின் பொருளாளர் கேசவன் அவர்களின் பங்களிப்பின் 200 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் வருங்கால தலைவர் நடன சபாபதி,பன்னலால் ஜெயின்,யாசின், அருள், சீனிவாசன், செல்லதுரை, யுவராஜ், நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் காந்திமதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெ. ரவிச்சந்திரன்,ம பிரதாப் செய்தனர். நன்றி உரை சங்கத்தின் செயலர் H.மணிகண்டன் கூறினார்
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி