0 0
Read Time:2 Minute, 53 Second

காரைக்கால், அக்டோபர்- 16;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள் பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனுக்கு சொந்தமான பைபர் படகில் பூவரசன், தென்னரசன், ஆறுமுகம், நிவாஸ் அருள்ராஜ், சரத் ஆகிய ஆறு பேர் கடந்த 12-ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு கோடியக்கரையில் இருந்து 20 நாட்டிகள் வடகிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு நான்கு படங்களில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் பூவரசன் படகு மீது மோதி மீன், வலை, உபகரணங்கள் ஆகியவற்றை அள்ளி சென்றனர். இதில் பூவரசன் படகில் இருந்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். பிறகு அவர்கள் அதே படகில் பெருமாள் பேட்டை வந்தனர்.

அவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட செயலாளருமான நிவேதா எம்.முருகன் திமுக கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று பார்த்து பழ வகைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி ஆறுதல் கூறியதோடு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரசின் கவனத்திற்கு இச்சம்பவம் கொண்டு செல்லப்படும் என மீனவர்களிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, இலுப்பூர் ஊராட்சி, அரசலங்குடி பகுதியில் நழுவுற்று வாழும் மெக்கானிக் சரவணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு விநாயக மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் தகவல் அறிந்து நேரில் சென்று அவருக்கு உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி எம் ஸ்ரீதர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %