0 0
Read Time:2 Minute, 9 Second

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் ஆட்டி படைத்தது. கடந்த 2 வருடங்களாக உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று பாதிப்பு 271- ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மேலும் 271 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 66 பேர், செங்கல்பட்டில் 23 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 286 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 74 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %