சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு காயகல்ப பயிற்சி கொடுப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ரோட்டரி மிட் டவுன் சங்க தலைவர் முனைவர் எஸ். பிரகதீஸ்வரன் தலைமையேற்று காயகல்ப பயிற்சியை பற்றி விளக்க உரையாற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி கலைவாணி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில் மாணவிகள் அனைவரும் இந்த காயகல்ப பயிற்சியை நன்கு பயின்று பயன்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிதம்பரம் திருச்சிற்றம்பலம் மனவளக்கலை பேராசிரியை திருமதி. துர்கா தேவி வெங்கடேசன் அவர்கள் காயகல்ப பயிற்சியை மாணவிகளுக்கு அவர்களது பயிற்சியாளர் குழுவினருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சியின் முதல் கட்டமாக பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் 100 பேர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் வரும் நாட்களில் தொடர்ந்து ஆயிரம் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த பயிற்சி மாணவிகளுக்கு உடல் வலிமையும் மன வலிமையும் அளிக்கும் என்ற உறுதியுடன் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் ஊழியர்கள் உடற்பயிற்சி ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் முனைவர் கே. சின்னையன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் தில்லை கோவிந்தராஜன் மற்றும் பொருளாளர் எல். சி.ஆர். கே நடராஜன் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி