0 0
Read Time:3 Minute, 30 Second

செம்பனார்கோயில், அக்-19;
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

சுப்பிரமணியன்: கஞ்சாநகரம் கிராமத்தில் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். கஞ்சாநகரம் ஊராட்சி மங்கனூர் கிராமத்தில் கடந்த 1997- 98 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளையும் ஆய்வு செய்து வடிகால் வசதி, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்.

தேவிகா: இலுப்பூர் ஊராட்சியில் வடக்கு தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லும்போது பாலம் உடைந்து சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து தர வேண்டும்.

ராணி: திருச்சம்பள்ளி வண்ணாங்குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும். முடிகண்டநல்லூரில் அங்கன்வாடி அமைப்பதற்கான இடம் உள்ளது. அங்கு அங்கன்வாடி அமைத்து தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும். மேலும் தற்போது மழைக்காலமாக என்பதால் சரியாக வடிகால் வசதி இல்லாத ஊராட்சிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக சென்னையில் செய்ததை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஒன்றிய குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %