0 0
Read Time:3 Minute, 7 Second

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சோனியா காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து காங்கிரசின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவில் 95% வாக்குகள் பதிவானதாக காங்கிரஸ் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை வரை நீடித்தது.

வாக்குஎண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேயின் இல்லத்திற்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் சென்றார். அங்கு கார்கேவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை சோனியா காந்தி தெரிவித்தார். அவருடன் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %