மயிலாடுதுறை:தரங்கம்பாடி டேனிஸ் கோட்டையில் ஓசோன் பீச் லயன் சங்கம், தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தூய்மை பணி
தரங்கம்பாடி,அக்.20; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் தரங்கம்பாடி ஓசோன் பீச் லயன் சங்கம், தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து தூய்மை பணி நடைபெற்றது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் நடைபெற்ற தூய்மை பணி நிகழ்ச்சிக்கு தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கமலக்கண்ணன், பேரூராட்சி துணைத் தலைவரும், தரங்கம்பாடி ஓசன் பீச் லயன்ஸ் சங்க சாசனத்தலைவருமான பொன்.ராஜேந்திரன், தென்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி செயலாளர் அருள்தந்தை அந்தோணி டேனியல், முதல்வர் வெண்ணிலா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் இளங்கோ வரவேற்றார்.
இதில் தொன் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரைப் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் லயன் சங்கத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் நந்தகுமார், பொருளாளர் புரட்சி தாசன், நிர்வாக அலுவலர் ஜான் சைமன், மாணவர்கள் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்