0 0
Read Time:2 Minute, 53 Second

சைபர் குற்றங்கள் பொறுத்தவரை வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டும் ஏமாற்றவில்லை, ஏமாற்றுபவர்கள் அருகிலிருந்தே தான் சைபர் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு பேசியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை மற்றும் சட்ட ஆய்வுகள் துறை நடத்தும் காவல்துறையினர் சந்திக்கும் சீர்திருத்தங்கள் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் பற்றிய கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது.இதில் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் உத்தரப்பிரதேச டி.ஜி.பி பிரகாஷ் சிங் கலந்துகொண்டனர்.

அதில் மாணவர்களிடையே கலந்துரையாடிய விஜிபி சைலேந்திரபாபு,‘சைபர் குற்றங்கள் பொறுத்தவரை வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டும் ஏமாற்றவில்லை, ஏமாற்றுபவர்கள் அருகிலிருந்தே தான் நடைபெறுகிறது. உங்களுக்கு 10,0000 லட்சத்துக்கு லாட்டரி விழுந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் ஏன் அதை நம்புகிறீர்கள் மக்கள் நீங்கள் வீட்டிற்கு காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது காவல்துறை.

அப்போது இருந்த பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் காவல்துறை அரசாங்கத்திற்காகத்தான் என்ற ஒரு நடைமுறை இருந்தது தற்போது மக்களுக்கான ஒரு காவல்துறையாக மாறி வருகிறது நைஜீரியர்கள் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு நமது ஆட்கள் தான்

உதவி செய்கிறார்கள்.இருப்பினும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் நிறைய ஆன்லைன் மோசடி நடைபெற்று வருகிறது. அதனை தடுப்பதற்கு சைபர் போலிசார் முயற்சி செய்து வருகிறார்கள். மானவர்கள் நீங்கள் கேள்வி கேட்கிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நீங்கள் எப்போது கேள்வி கேட்க ஆரம்பித்தீர்களோ அப்போதுதான் காவல் துறையும் நாடும் முன்னேறும் மாற்றம் ஏற்படும் என டிஜிபி சைலேந்திர பாபு பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %