0 0
Read Time:1 Minute, 49 Second

ஜார்க்கண்டில் தன்பாத் ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. சரக்கு ரெயிலில் நிலக்கரி ஏற்றப்பட்டு இருந்தது. இந்த நிலையில், காலை 6.24 மணியளவில் திடீரென சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது. இதில் ரெயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன. அவற்றில் பல பெட்டிகள் உடைந்து, உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டி பரவியிருந்தன. சரக்கு ரெயில் அடுத்து இருந்த தண்டவாளம் வரை புரண்டு கிடந்தது.

இதனால், அந்த வழியே செல்ல கூடிய மற்றும் அந்த வழியில் வரும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய கிழக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். நிலைமையை சரி செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் ரெயில் சேவை மீண்டும் இயங்குவதற்கு பல மணிநேரம் ஆகும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %