0 0
Read Time:2 Minute, 51 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இது குறித்து கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இந்த தி்ட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30.09.2022 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.

பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்ற, மேல் நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் தகுதி பெற்றவர்கள் ஆவர். உதவித்தொகை பொதுப்பிரிவினருக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 என 3 மாதங்களுக்கு ஒரு முறை என தொடர்புடையவரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுதப் படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.600, மேல்நிலை வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி என்றால் ரூ.1000 என 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு, தற்போது ஒவ்வொரு மாதமும் தொடர்புடையவரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %