0 0
Read Time:2 Minute, 34 Second

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கு, நேற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டத்தை அடுத்து, என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து விசாரனை நடைபெற்று வந்ததையடுத்து, கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ இன்று முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என ஜமேசா முபின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜமேசா முபின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில், 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பொட்டாசியம் நைட்ரேட், கருப்பு பவுடர், 2 மீட்டர் நீளமுள்ள திரி, நைட்ரோ கிளிசரின், சிகப்பு பாஸ்பரஸ், சல்பர் பவுடர், இண்டன் கேஸ் சிலிண்டர், கையுறை, இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை வெடிபொருள் சட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க என்ஐஏ ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %