0 0
Read Time:2 Minute, 34 Second

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் வீடு திரும்பினார். முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமம் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டவர்கள் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %