சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி அரங்கத்தில் தென்கிழக்கு ஆசிய சுற்றுச்சூழல் நிலை பேறு செயல் விழிப்புணர்வு குழுப்பயணம் திருப்பூரிலிருந்து தென் தமிழகம் வரை சென்று தமிழகம் வரை சென்று மீண்டும் திருப்பூரை அடையும் கார் பயணம் (சுமார் 2000 கி.மீ.) மேற்கொண்ட மிகச் சிறந்த ரோட்டேரியன்கள் நான்கு பேர் அடங்கிய குழு சிதம்பரத்தை அடைந்தபோது அவர்களுக்கு ரோட்டரி மண்டலம் – 8 ரோட்டரி மாவட்டம் – 2981 சார்பாக ஆறு ரோட்டரி சங்கங்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மண்டலம் எட்டைச் சேர்ந்த ஆறு ரோட்டரி சங்கங்கள் அதாவது சிதம்பரம் ரோட்டரி சங்கம், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் கொள்ளிடம் ரோட்டரி சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், புவனகிரி ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு திண்டல் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த பூமா மகேந்திரவர்மன், ஈரோடு ரோட்டரி சங்கத்தின் சிவபாலன், திருப்பூர் சங்கத்தின் ரவீந்திரன். அவிநாசி ஈஸ்ட் ரோட்டரி சங்கத்தின் விசித்திரா செந்தில்குமார் ஆகியோர் சுற்றுச்சூழல் நிலைபேறு செயல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கங்களின் கொடிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அந்த உரையில் உலக மாசு கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினர்.
மேலும் அதில் சிறு காடுகள் அமைத்தல், நிலவளம் காத்தல், மரம் நடுதல், அலையாற்றி காடுகள், பராமரித்தல் போன்ற விஷயங்களை பறைசாற்றும் விதமாக பிரசுரங்கள் கையேடுகள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க தலைவர் முனைவர் எஸ் பிரகதீஸ்வரன் அவர்கள் துணை ஆளுநர் முனைவர் எம்.தீபக்குமார் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவிற்கு சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் ரத்தினசபேசன், செயலாளர் கனகவேல், பொருளாளர் சி.சந்திரசேகரன், உறுப்பினர்கள்
நடனசபாபதி, சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் கே சின்னையன், பொருளாளர் கே. நடராஜன், முன்னாள் தலைவர்கள். முனைவர் கே.கதிரேசன், முனைவர் எஸ்.மோகன்,
ஏ.எஸ்.கேசவன், கே.நாகராஜன், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் எச். மணிகண்டன், கொள்ளிடம் ரோட்டரி சங்க தலைவர் ஜி.முகில்வண்ணன்,
செயலாளர் எம். கார்த்திகேயன், பொருளாளர் வி.குமார், முன்னாள் துணை ஆளுநர் ஷாஜஹான், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பி.ராஜசேகரன் பொருளாளர் என்.கேசவன்,
முன்னாள் துணை ஆளுநர் முனைவர் முகமது யாசின், புவனகிரி ரோட்டரி சங்க தலைவர் கே. ஹபீப் ரஹ்மான், மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி