மயிலாடுதுறை அண்ணா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவுறுத்தி உள்ளார். உற்பத்தி குழுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. நிவேதா முருகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல், வரப்போரங்களில் பழச் செடிகள், மரக்கன்றுகள் வளர்த்தல், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்வதற்கு இடுபொருட்கள் வழங்குதல், நெகிழி கூடைகள் வழங்குதல் போன்ற இத்திட்டத்தின் வாயிலாக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
நுண்ணுயிர் பாசன திட்டம் மேலும் பிரதம மந்திரியின் விவசாயத்திற்கான நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் மழைத்தூவான் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் பற்றியும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மின் மோட்டார், என்ஜின்கள் விவசாயிகளுக்கு வழங்க தேர்வு செய்யும் பணிகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் பற்றி இயற்கை முறையில் காய்கறி சாகுபடி திட்டம் பற்றியும், நீர்வள, நிலவள மேம்பாட்டுத் திட்டத்தில் காய்கறி சாகுபடி நுண்ணுயிர் சாகுபடி திட்டம் பற்றியும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காய்கறி சாகுபடி, மலர் சாகுபடி, காய்கறி விதைத் தழைகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள முறைகள் பற்றியும் கலெக்டர் கேட்டறிந்தார். வெளிப்படை தன்மை அண்ணா கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளை வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும்.
தமிழக அரசு கொண்டுவரக்கூடிய திட்டங்களை விவசாயிகளிடம் எடுத்துச் சொல்லவேண்டும். வேளாண்மை திட்டங்கள் பற்றி வேளாண்மை உற்பத்திக் குழுக்களுடன் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மை இணைஇயக்குனர் சேகர், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜ், மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.