தரங்கம்பாடி, அக்டோபர்- 29;
இந்திய கடற்படை, மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்.
தரங்கம்பாடியில் நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ஆம் தேதி தொழில் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 மாவட்டங்களைச் சார்ந்த 21 கிராம மீனவப் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்டம் மீனவர்கள் 10 நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையையும், மத்திய அரசையும் கண்டித்து கடலூர் முதல் கன்னியாகுமரி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடத்துவது, கண்டன ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடந்தாலும் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களும் இணைந்து நடத்திட வேண்டும். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று அனைத்து மாவட்ட மீனவர்களும் தொழில் மறியல் செய்திட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்