0 0
Read Time:3 Minute, 22 Second

மயிலாடுதுறை, நவம்பர்- 02;
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநிலக் கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பழகன், மாநில விவசாய அணி இணை செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியபோது பாஜகவை வீழ்த்தக்கூடிய மாபெரும் சக்தியாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார். சட்டப்பேரவை தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண உள்ளார். நாதல் படுகை, முதலை மேடு உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை தமிழக முதல்வர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். 13 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் திமுகவில் இணைய ஆர்வமாக உள்ளவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றார்.

மேலும் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள், சத்தியசீலன், ஜெக.வீரபாண்டியன், பன்னீர்செல்வம், எம்.எம்.சித்திக், மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஞானவேலன் கண்ணகி பன்னீர், செல்வமணி, மகா.அலெக்சாண்டர், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் திமுக கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர கழக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான செல்வராஜ் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %